News
பூஜையுடன் ஆரம்பமானது பாண்டியராஜ் இயக்கும் சூர்யா 40 படப்பிடிப்பு !

சூரரை போற்று வெற்றிக்கு பின்னர் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. தற்போது 2டி நிறுவனம் தயாரித்து வரும் படத்தில் அருண் விஜய் மற்றும் அவரது பையன் நடிக்க அதில் சிறு கெளரவ வேடத்தில் நடித்து வருகிறார் சூர்யா.
பாண்டிராஜ் இயக்கவுள்ள திரைபப்டத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது இப்படத்தில் நாயகியாக டாக்டர் படத்தில் அறிமுகமான நடிகை ப்ரியங்கா மோகன் நடிக்கிறார். மிக முக்கியமான ஒரு வேடத்தில் சத்யராஜ் நடிக்கவுள்ளார்.கார்த்தியுடன் இணைந்து நடித்திருக்கிறார் நடிகர் சத்யராஜ் தற்போது சூர்யாவுடன் முதல் முறையாக இருவரும் நடிக்கவுள்ளனர்.
இந்நிலையில் இன்று இப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் பூஜையுடன் ஆரம்பமானது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘சூர்யா40’ என அழைத்து வருகிறது படக்குழு. ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழு திட்டமிட்டு வருகிறதாம்.