News
சென்சாரில் சிக்கலில் மாட்டிக் கொண்ட ஜீவாவின் ஜிப்சி

இயக்குநர் ராஜீமுருகன் இயக்கத்தில் ஜீவா நடித்த படம் ஜிப்சி இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில் அத வெளியிடுவதில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது. படத்தை முடித்து விட்டு சென்சாருக்கு அனுப்பியது படக்குழு படத்தை பார்த்து முடித்து விட்ட தணிக்கை குழு இந்த படத்திற்கு தணிக்கை வழங்க முடியாது என மறுத்து விட்டது.
படத்தில் உத்தர பிரதேஷ் மாநில முதல்வர் போல ஒருவர் நடித்துள்ளார். அந்த கதாப்பாத்திரத்தை கடுமையாக விமர்சித்து இருப்பதாக கூறப்படுகிறது. அதே போல மத்திய அரசின் செயல்பாடுகளை பற்றியும் படத்தில் கடுமையாக விமர்சித்து உள்ளனர். இந்த காரத்தால் படம் கடும் சிக்கலில் உள்ளது.
மும்பையில் உள்ள தணிக்கை குழுவிடமும் இந்த படத்தை போட்டு காண்பித்தனர் படக்குழு அவர்களும் குறிப்பிட்ட வசனங்களையும் அதே போல குறிப்பிட்ட காட்சிகளையும் நீக்க வேண்டும் என்று உத்தரவு விட்டுள்ளார்கள்.