News
கொரோனா தடுப்பு நிதிக்காக ரூ.1 கோடி வழங்கிய ரஜினிகாந்த் !

கொரோனாவின் கோர தாண்டவத்தின் இரண்டாம் அலை நாடு முழுவதும் தற்போது பெரும் தாக்கையும் பல உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பட்டுத்தான் வருகிறது.
இந்த கொரோனா என்ற கொடிய அரக்கனை கட்டுப்படுத்தி அழிக்க அனைவரும் நிதி வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பு பணிக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக நடிகர் ரஜினிகாந்த் சார்பில் அவரது மகள் செளந்தர்யா ரூ.1 கோடியை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார்.