Connect with us
 

News

ஜகமே தந்திரம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என்று நான் விரும்புகிறேன் – தனுஷ் !

Published

on

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த திரைப்படம் ஜகமே தந்திரம் இத்திரைப்படம் ஓடிடியில் கிட்டத்தட்ட வெளியாக உறுதியாவிட்டது.

ஆனால் தனுஷ் இப்படத்தை ஓ.டி.டியில் வெளியீட்டுக்கு கடும் எதிர்ப்பும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படம் வெளியீடு குறித்த பது ஒன்றை பதிவு செய்துள்ளார். ஜகமே தந்திரம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் நினைப்பதைதான் திரையரங்கு உரிமையாளர்களும் சினிமா ரசிகர்களும் விநியோகஸ்தர்களும் விரும்புகின்றனர். அனைவரின் விருப்பதையும் கருதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று நம்புகிறேன் என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இருந்தாலும் இந்த படத்தை ஓ.டி.டியில் விற்பனை செய்ய தயாரிப்பாளர் பேச்சு வார்த்தை முடித்து விட்டார்கள் எனவும் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் தனுஷின் எதிர்ப்பையும் மீறு தயாரிப்பாளர் திரையரங்குகளில் வெளியிடாமல் ஓ.டி.டி தளத்தில் ரிலீஸ் செய்ய போகிறார் என்று கூறப்படுகிறது.

Continue Reading