News
இயக்குநர் ஜனநாதனின் முழு மருத்துவ செலவையும் ஏற்ற விஜய்சேதுபதி !
இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு மற்றும் தற்போது லாபம் படத்தின் இயக்குனர் எஸ்.பி ஜனநாதன். இடதுசாரி சிந்தனைக் கொண்டவராக சொல்லப்படும் இவருக்கும் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மரியாதை உண்டு.
தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் இவர் இயக்கிவரும் லாபம் படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்றுவருகிறது. அந்த பணிகளில் ஈடுபட்டு வந்த அவர் வீட்டில் மயக்கமுற்ற நிலையில் கிடந்துள்ளார்.
இதனையடுத்து அவரை மீட்ட உதவி இயக்குனர்கள் சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஜனநாதனின் உற்ற நண்பரான விஜய்சேதுபதி அவரின் மருத்துவமனை முழு செலவையும் தான் ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளாராம். அது மட்டுமில்லாமல் நேற்றிலிருந்து மருத்துவமனையில் ஜனநாதன் உடனே இருந்து அவரை கவனித்து வருகிறார் விரைவில் குணமடைய நாமும் பிரார்தனை செய்வோம்.