Connect with us
 

News

ஜனவரி 13-ஆம் தேதி ‘மாஸ்டர்’ திரைப்படம் ரிலீஸ் உறுதி செய்த தலைவர் !

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் – விஜய்சேதுபது இணைந்து நடித்து வெளிவரவிருக்கும் ‘மாஸ்டர்’ திரைபப்டம் பொங்கள் விருந்தாக ஜனவரி 13ம் தேதி வெளிவரும் என தயாரிப்பாளார் தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி குறித்து நாளை மதியம் வெளியாகும் என்று படக்குழு இன்று தெரிவித்தது.

இந்த நிலையில் சற்றுமுன் திரைப்பட உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் ஜனவரி 13-ஆம் தேதி ‘மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்புக்கு பின் வெளியாகும் மிகப்பெரிய படம் இதுதான் இன்றும் அதற்காக தாங்கள் விஜய்க்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

‘மாஸ்டர்’ திரைப்படம் ரிலீஸ் ஆனால் மட்டுமே பொதுமக்கள் மீண்டும் திரையரங்குகளுக்கு வர வாய்ப்பு உள்ளதாக அனைத்து திரையரங்க உரிமையாளர்களும் நம்பிக்கொண்டிருக்கும் நிலைதில் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதால் விஜய் ரசிகர்கள் மட்டுமின்று அனைத்து சினிமா ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.