Connect with us
 

News

ஜி.வி.பிரகாஷ் திரைப்படத்தில் இணையும் அசுரன் தனுஷ் !

Published

on

மிஸ்டர் லோக்கல் என்ற படத்தை அடுத்து எம்.ராஜேஷ் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.இது குறித்த தகவல் சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் ஜீ.வி.பிரகாஷ் ஜோடியாக நடிக்க பிகில் படத்தில் நடித்த அம்ரிதா அய்யர் நடிக்க உள்ளாராம். முழுக்க முழுக்க காமெடி கதைக்களம் கொண்ட இப்படத்தில் ஆனந்ததாஜ், பிக்பாஸ் டேனியல் பிக்பாஸ் ரேஷ்மா உள்பட பலர் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் தனுஷ் இணைந்துள்ளார் என்ற தகவல்கள் வெளியானது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து நடிக்கும் இந்த படத்தில் ஒரு பாடலை எழுது தனுஷ் பாட இருப்பதாகவும் இந்த பாடலின் டைட்டில் டாட்டா பை பை பை என்றும் இந்த பாடல் குறித்த பர்ஸ்ட் விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜி.வி.பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த ஆண்டு நான் இசையமைக்கும் முதல் பாடல் இது என்றும் இந்த பாடலை தனுஷ் பாட இருப்பதாகவும் கானா வினோத் என்பவர் எழுதி இருப்பதாகவும் இந்த பாடல் டாட்டா பை பை என்று தொடங்கும் பாடல் என்றும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading