Connect with us
 

News

நீங்கள் மனிதர் அல்ல கடவுள் என் ஆழ்மனதில் இருந்து உங்களுக்கு நன்றி கூறுகிறேன் !

Published

on

தமிழகத்தின் மறந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் படமாக்கி வருகிறார் இயக்குநர் விஜய் அவர்கள். இது ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் எடுக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்து வருகிறார்.

இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் படத்தின் ரிலிஸ் தேதி ஏப்ரல் 9 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படம் நடித்தது குறித்து நடிகை கங்கனா இயக்குனர் விஜய் குறித்து டிவிட்டரில் ஒரு பதிவை பதிவு செய்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பது.

‘உங்களுடனான எனது பயணம் மிக விரைவில் னிறைவடையப்போகிறது நீங்கள் எந்தவிதமான பார்ட்டிகளுக்கும் செல்வதில்லை. நான் நன்றாக நடிக்கும்போது உங்கள் கண்கள் ஜொலிக்கின்றன. எப்படிப்பட்ட இக்கட்டான நிலை வந்தாலும் உங்களிடம் கோபம், பாதுகாப்பின்மை, நம்பிக்கையின்மை ஆகியவற்றை நான் பார்த்ததில்லை. உங்கள் நீண்ட நாள் நண்பர்களிடம் பேசினால் அவர்களுடைய கண்கள் பிரகாசமாகின்றன. நீங்கள் மனிதர் அல்ல, கடவுள். என் ஆழ்மனதில் இருந்து உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.’ எனக் கூறியுள்ளார்.