Connect with us
 

News

தண்ணீரில் உள்ள அரசியலை சொல்ல வருகிறான் க/பெ.ரணசிங்கம் !

Published

on

மக்கள் விஜய்சேதுபதியுடன் – ஐஸ்வர்யா ராஜேஷ் , சமுத்திரக்கனி,வேல ராமமூர்த்தி மற்றும் பவாணிஶ்ரீ நடித்துள்ள படம் ‘க/பெ ரணசிங்கம்.இதை விருமாண்டி என்ற புதுமுக இயக்குநர் இயக்கியுள்ளார். அறம் படத்தை தயாரித்த ‘கோட்டபாடி ராஜேஷ் தயாரித்துள்ளார். இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இப்படம் தண்ணீர் அரசியல் குறித்து பேசுகிறது. குடிநீருக்கே தள்ளாடும் வறண்ட கிராமத்தில் நிலத்தடி நீர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அங்கு மினரல் வாட்டர் கம்பெனி நடத்த முயற்சி செய்யும் ஒரு கார்ப்பரேட் கம்பெனிக்கும் அதனை தடுக்க முயற்சி செய்யும் ரணசிங்கம் என்ற ஒரு மனிதனுக்கும் இடையில் நடக்கும் மோதல்தான் படம்.

இப்படத்தில் ரணசிங்கமாக மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிக்க அவரது மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். படப்பிடிப்புகள் அனைத்தும் ஏற்கனவே முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் டப்பிங் பணிகளுக்கு தளர்வு கிடைத்திருப்பதால் மற்ற பணிகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்த பின்னரே படத்தி வெளியிட திரைப்படக்குழு திட்டமிட்டு இருக்கின்றனர்.