Connect with us
 

News

தனது வாழ்வில் நடந்த உண்மையை வைத்து பாடல் பாடிய மாஸ்டர் தளபதி !

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் படம் மாஸ்டர் . ஹீரோயினாக நடிக்கிறார் மாளவிகா மோகன்.ஆண்ட்ரியா, சாந்தனு,அர்ஜுன் தாஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்,செகண்ட் லுக் மற்றும் தர்டு லுக் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் “ஒரு குட்டி கதை” பாடல் ரிலீஸ் ஆகி தற்போது வைரலாகி வருகிறது. அருண் ராஜா காமராஜ் வரிகளில், தளபதி விஜய் அவர்கள் இப்படலை பாடியுள்ளார். அனிருத் ரவிச்சந்திரன் இசை அமைத்து இருக்கிறார்.

தளபதியின் குரலில் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இந்தப் பாடல் வெளிவந்த 5 நிமிடத்தில் 1 லட்சம் லைக்ஸ் மற்றும் அரை மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப் பெரிய சாதனை படைத்து வருகிறது. இதை தளபதியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.மாஸ்டர் படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.

By : Saranya