Connect with us
 

News

தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தின் பர்ட்ஸ் லுக் உடன் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

Published

on

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்து சில தினங்களுக்கு முன்னர் தனுஷ் தனது அனைத்து டப்பிங் பணிகளையும் முடித்தார் அதனுடன் படத்தின் அனைத்து வேலைகளும் நிறைவு பெற்று விட்டது என்று படக்குழு அறிவித்தது.

இந்நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடஷன் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று இப்படத்தின் பர்ட்ஸ் லுக்க் போஸ்டர் காலை 11 மணிக்கு வெளியாகும் என்று ஒரு அறிவிப்பு வெளியானது. படக்குழு கூறியது போலவே இன்று காலை 11 மணியளவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்களின் டிவிட்டர் பக்கத்தில் பர்ட்ஸ் லுக் அதனுடன் வெளியீட்டு தேதியையும் அறிவித்துள்ளார்.

இப்படம் வரும் தமிழ் புத்தாண்டு விருந்தாக ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார். வெளியிட்டுள்ள அந்த போஸ்டரில் தனுஷ் தனுஷ் கையில் விலங்குடன் கோபத்துடன் முகத்தில் ரத்தம் சொட்ட சொட்ட இருக்கும் மாஸ்ஸான பர்ட்ஸ் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்த பர்ட்ஸ் லுக் போஸ்டரை பார்த்த பின்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading