Connect with us
 

News

தமிழ் படமா இல்லை ஹாலிவுட் படமா அனைவரையும் வியக்க வைத்த ஜகமே தந்திரம் டீசர் !

Published

on

இயக்குநர் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் ஜகமே தந்திரம். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இத்திரைப்படம் நேரடியாக ஓ.டி.டி தளமான நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

இந்நிலையில் நேற்று மாலை இப்படத்தின் டீசர் இன்று வெளியாகும் என்று தகவல் வெளியானது. அதே போல இன்று காலை 10 மணிக்கு இப்படத்தின் டீசர் வெளியானது.

வெளியான இந்த டீசரில் படத்தின் ஒரு சில காட்சிகளுடன் வசனங்களுக்கும் அதனுடன் ரகிட ரகிட பாடலும் வெளியாக மிரட்டலாக உள்ளது.

டீசரை பார்த்த ரசிகர்கள் இது தமிழ் படம்தானா இல்லை ஹாலிவுட் படமா என்ற அளவுக்கு வியந்து போய் பாராட்டி வருகின்றனர்.