News
தனுஷ் 43 படம் பற்றி புதிய தகவலை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ் !

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைத்து மற்றும் நடித்து வரும் திரைப்படங்களை பற்றி தனது சமூகவலைத்தளத்தில் அவ்வவ்போது பதிவிடுவது வழக்கம்.
இந்நிலையில் ஜி..வி.பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் ‘ஜெயில்’ படத்தில் இடம்பெற்ற ‘காத்தோடு’ என்ற தனுஷ் பாடியிருக்கும் பாடலை கபிலன் எழுதி உள்ளதாகவும் மற்றும் சூர்யாவின் ‘சூரரை போற்று’ படத்தில் மூன்று டிராக்குகள் புதியதாக இணைக்கப்பட்டுளதாகவும் அது குறித்து அப்டேட் விரைவில் வரும் என்றும் ஜி.வி.பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தனுஷின் 43-வது படத்தை கார்த்திக் நரேன் இயக்க உள்ளார். இத்திரைப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் பின்னணி இசை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் இந்த படத்தின் இசை வெளியீடு மிகப்பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் இந்த படத்தில் தனுஷ் ஒரு பாடலை எழுதி பாடியுள்ளார் என்றும் இது குறித்து தகவல் விரைவில் வரும் என்றும் அவர் அதில் கூறினார்.