News
தல படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் ரோபோ ஷங்கர்

தனது கடின உழைப்பால் முன்னணி காமெடி நடிகர்களுள் ஒருவராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார் ரோபோ ஷங்கர்.
இந்த நிலையில் அஜித்தின் விசுவாசம் படத்தில் நடிக்க ரோபோசங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருகிறார்.
இந்த நிலையில் அவர் இந்த படத்திற்காக 50 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும், இந்த படம் முழுவதும் அஜித்துடன் பயணிக்கும் முக்கிய கேரக்டர் அவருக்கு என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ‘விசுவாசம்’ படத்தில் யோகிபாபு, தம்பி ராமையா என இரண்டு காமெடி நடிகர்கள் நடிக்கவுள்ள நிலையில் மூன்றாவது காமெடியனாக ரோபோ சங்கர் இணைந்துள்ளார்.
அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ள இந்த படத்தை சிவா இயக்கவுள்ளார். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.