Connect with us
 

News

உறுதியான தளபதி 65 படத்தின் கதாநாயகி !

Published

on

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி நடிக்கும் தளபதி 65 திரைப்படத்தை இயக்குகிறார் நெல்சன் திலீப்குமார் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கிறது. அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளாது. 2022-ஆம் ஆண்டின் பொங்கள் திருநாளில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.

இந்நிலையில் இப்படத்தின் நடிகை யார் என்ற கேள்வி பல மாதங்களாக ரசிகர்கள் மத்தியில் ஒரு கேள்வியாக இருந்து வந்தது முதலில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, தமன்னா, ராஷ்மிகா மந்தன்னா நடிக்கப்போகிறார்கள் என்ற வதந்திகள் பரவி வந்தது.

இப்போது இப்படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே நடிப்பது உறுதியாகிவிட்டது. இவர் தமிழில் இதற்கு முன்னர் முகமூடி என்ற படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.