News
தளபதி பற்றி அப்பிடி பேசியது தவறுதான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட கருணாகரன்

பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்தவர் நடிகர் கருணாகரன் இவர் அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படத்தில் காமெடியனாக நடித்திருப்பார். இவர் ஒரு அஜித் ரசிகரும் கூட இதனால் இவருக்கும் தளபதி ரசிகர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நடைபெற்று வந்தது.
கருணாகரன் விஜய் ரசிகர்கள் பற்றி பேசுகையில் நடிகர்கள் தங்களின் ரசிகர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லிகொடுக்க வேண்டும் ஊருக்கு மட்டும் புத்திமதி கூறினால் மட்டும் போதாது. அதை தாமும் பின்பற்ற வேண்டும். இந்த செய்தியை கேட்டு கடுப்பான விஜய் ரசிகர்கள் கருணாகரனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர். இவர்கள் இப்படி செய்வது தனக்கு விஜய் மீதான மரியாதையை குறைக்க செய்கிறது என கருணாகரன் கூறியிருந்தார்.
இந்த நிலையில் நடிங்கர் கருணாகரன் தனது டிவிட்டரில் நான் அப்படி விஜய்யை பேசியது தப்புதான் நான் அப்படி பேசியது யார் மனதையும் காயப்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார். இதை பார்த்த விஜய் ரசிகர்கள் ஏன் இந்த மாற்றம் என்றும் ஒரு சில ரசிகர்கள் படம் இல்லை போல அதன் இப்படி பேசுகிறார்கள் என்று கிண்டலடித்து வருகிறார்கள்.