News
தளபதி ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்த படக்குழு !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் டீஸர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகயுள்ளது என்று அறிவிப்பு வந்த நேரத்தில் இருந்து இன்று வரை ரசிகர்கள் டுவிட்டரில் இது குறித்து ஹேஷ்டேக் உருவாக்கி உலகளவில் டிரண் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இரட்டிப்பு மகிழ்ச்சி கொடுக்கும் விதமாக நாளை மாளை 6.30 மணிக்கு தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ‘மாஸ்டர்’ படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளாது. இந்த அறிவிப்பு தளபதி விஜய் ரசிகர்களுக்கு இரட்டிப்பு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
நாளை தீபாவளி திருநாளில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே வெளியாக இருக்கும் நேரத்தில் திரையரங்குகளில் கூட்டம் கூடுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஆனால் ‘மாஸ்டர்’ படத்தின் டீசரை பார்ப்பதற்க்காக நாளை மாலை திரையரங்குகளில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.