Connect with us
 

News

தளபதி விஜய்யுடன் முதல் முறையாக இணையும் வரலட்சுமி

Published

on

சிம்பு நடித்த ‘போடா போடி’ படத்தில் அறிமுகமாகி ஒருசில படங்களில் நடித்த நடிகை வரலட்சுமிக்கு பாலாவின் ‘தாரை தப்பட்டை’ திரைப்படம் நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.

தற்போது அவர் தனுஷுடன் மாரி 2, விஷாலுடன் ‘சண்டைக்கோழி 2, சத்யராஜூடன் ‘எச்சரிக்கை’, கவுதம் கார்த்திக்குடன் Mr.சந்திரமெளலி, விமலுடன் ‘கன்னிராசி’, போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் முதன்முதலாக விஜய்யுடன் அவர் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆம், விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ‘தளபதி 62’ படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க வரலட்சுமி ஒப்பந்தமாகியுள்ளார். முதன்முதலாக விஜய்யுடன் இணைந்து நடிக்கவுள்ள வரலட்சுமிக்கு விஜய் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Continue Reading