Connect with us
 

News

தளபதி விஜய் படத்திற்க்கு மட்டுமே இந்த சாதனை நடக்கும்

Published

on

கைதி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின்னர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் அவர்களை வைத்து இயக்கி வரும் படம்தான் மாஸ்டர். 80 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.இந்த நிலையில் சமீபத்தில் வெளியான படத்தின் இரண்டாவது லுக் ரசிகர்கள் மத்தியில் பெரும் வறவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்த இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகி சுமார் டுவிட்டர் இனையத்தில் ஒரு மில்லியன் ஹேஷ்டேக்குகளை பெற்றுள்ளது என்ற தகவல் தற்போது வந்துள்ளது.
அதிகம் ஹேஷ்டேக்குகளை பெற்ற செகண்ட் லுக் போஸ்டர் என்ற பெருமையை இந்த போஸ்டர் பெற்றுள்ளதாக டுவிட்டர் இணைய தளமே முறைப்படி அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இதே போன்ற சாதனையை நிகழ்த்தியது அதே போல இரண்டாவது லுக் அதே சாதனையை செய்துள்ளது. இந்த சாதனை தளபதி விஜய் படத்திற்க்கு மட்டுமே நடக்கும் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படம் எப்ரல் மாதம் 2020 உலகமெங்கும் வெளியாக உள்ளது.