Connect with us
 

News

தளபதி 65 படப்பிடிப்பு எங்கு இப்போது ஆரம்பம் ?

Published

on

நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தின் கதாநாயகியாக பூஜா ஹெக்டே உற்பட இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இன்னோரு நாயகி ராஷ்மிகா மந்தன்னா நடிக்கவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியானது.

ராக் ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ரஷ்யாவில் படமாக்கபடவுள்ளது. படக்குழு முன்னரே அறிவித்தது போல முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள பூந்தமல்லியில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் நடக்கவுள்ளதாம்.

அங்கு பிரம்மாண்ட செட் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது என்கிறார்கள். தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகு கோகுலம் ஸ்டூடியோவில் இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ளதாம்.

இதனையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு ரஷ்யா செல்ல உள்ளதாம் படக்குழு. இதற்கு ரஷ்ய அரசாங்கத்திடம் அனுமதி கேட்டு விண்ணம் முறைப்படி அனுப்பியுள்ளதாம் படக்குழு.