Connect with us
 

News

தளபதி விஜய் நடிக்கும் 65 படத்தின் பூஜை இன்று சன் டிவி அலுவலத்தில் நடைபெறுகிறது !

Published

on

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடிக்கும் 65-வது திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவிருக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.

அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சட்டசபை தேர்தலுக்கு பின்னர் ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இப்படத்தின் பூஜை இன்று சன்.டி.வி அலுவலகத்தில் நடைபெற இருப்பதாகவும் இந்த பூஜையில் விஜய், பூஜா ஹெக்டே படத்தின் மிக முக்கியமான அனைவரும் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இன்று பூஜை நடைபெறுவது தொடர்ந்து அடுத்த ஓர் இரண்டு நாளில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.