Connect with us
 

News

தளபதியுடன் இணைகிறாரா ஜூனியர் என்.டி.ஆர் குழப்பத்தில் கோலிவுட்!

Published

on

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜார்யாவில் நடந்து வருகிறது. இந்நிலையில் விஜய் நடிக்கவுள்ள அவரது 66 மற்றும் 67-வது படங்களை இயக்கும் இயக்குனர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் விஜய்யின் 67 படத்தை அட்லி இயக்கவிருப்பதாகவும் இதில் விஜய்யுடன் முதல் முறையாக பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர்களுள் ஒருவரான ஜீனியர் என்.டி.ஆர் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படம் ஒரு பான் இந்தியா திரைப்படமாக உருவாகவிருப்பதாகவும் இந்த படம் 2022-ம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர் விஜய்யும் தெலுங்கு திரையுலகின் மாஸ் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் ஒரே படத்தில் இணைவது மிகப்பெரிய வியாபாரத்திற்கு வழவகுக்கும் என்றும் இந்த படம் ஒரு பான் இந்தியா திரைப்படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு 2022-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.