Connect with us
 

News

தளபதி 64 படத்தில் இணைந்த விஜய் நண்பர்கள்

Published

on

பிகில் படம் முடிவடைந்து வரும் தீபாவளிக்கு வெளியாவுள்ள நிலையில் தளபதி 64 படத்தை இயக்குநர் லோகேஷ் இயக்கவுள்ளார். இந்த படத்தின் நடிகை மற்றும் வில்லன் என அணைத்து காதாப்பாத்திரங்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தில் நடிகர் சாந்தனு ஒரு முக்கிய கதாப்பாத்தில் நடிக்கிறார்.இந்த நிலையில் தற்போது விஜய் நண்பர்களும் இந்த படத்தில் இணையவுள்ளார்கள்.

தளபதி விஜய் அவர்கள் சினிமா உலகத்திற்கு வரும் முன்னரே நண்பர்களாக இருந்தவர்கள் இருந்தவர் சஞ்சீவ் இவர் தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இதே போல நடிகர் ஸ்ரீமன் மற்றும் ஸ்ரீநாத் விஜய் அவர்களுடன் அந்த காலம் தொட்டு நண்பராக இருந்து வருகிறார்.

தற்போது இவர்கள் மூவரும் தளபதி 64 படத்தில் சேர்ந்து நடிக்க உள்ளார்கள் இதனை உறுதி செய்வது போல இவர்கள் மூவரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நால்வரும் நின்று எடுத்த ஒரு புகைபபடம் ஒன்று வெளியாகியுள்ளது.

இப்படத்தின் தயாரிப்பாளர் விஜய் குடும்ப நண்பர் ஆவார். இதனை தெடர்ந்து விஜய் அவர்களின் நெருங்கிய நண்பர்களும் இணைந்தது இருப்பது மேலும் இப்படத்திற்கு ஒரு கூடுதல் பலம்.