Connect with us
 

News

தளபதி 65 திரைப்படத்தில் பாடல் எழுதும் சிவகார்த்திகேயன் !

Published

on

கோலமாவு கோகிலா, டாக்டர் படத்தின் இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ள தளபதி 65 திரைப்படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளாது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்க்கவுள்ளார்.

இந்நிலையில் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பை ரஷ்யாவில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் வாக்களிப்பு நாளுக்கு பின்னர் ஆரம்பிக்க உள்ளது. இது ஒரு அரசியல் படமாக உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தை பற்றி ஒரு மேலும் ஒரு சிறப்பு அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுத உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு முன்னர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் திரைப்படங்களில் சிவகார்த்திகேயன் பாடலை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.