Connect with us
 

News

தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டெ !

Published

on

நெல்சன் இயக்கத்தில் தளாபதி விஜய் நடிக்கவுள்ள தளபதி 65 படத்தின் மீதான அந்த எதிர்பார்ப்பு என்பது ஒரு ஒரு நாளும் அதிகாகி கொண்டே போகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் நாயகியாக யார்தேர்வு செய்ய படுவார் என்ற கேள்வி இருந்து வந்தது தற்போது அதற்கு பதில் கிடைத்து விட்டது. தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக கலக்கி வரும் பூஜா ஹெக்டேதான் விஜய்க்கு ஜோடியாக நடிக்க போகிறாராம்.

தமிழ் சினிமாவில் முகமூடி என்ற படத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டே அதன் பின்னர் சரியான வாய்ப்பு அமையாததால் தெலுங்கு பக்கம் சென்று வரிசையாக வெற்றி படங்களை மட்டும் கொடுத்து வந்தார்.

தற்போது பிரபாஸ் நடிக்கும் ராதே ஷ்யாம் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சக நடிகையான சமந்தாவின் ரசிகர்களும் இவரின் ரசிகர்களும் டோலிவுட் சினிமாவில் அடித்துக்கொள்வது தமிழ் சினிமாவில் விஜய் – அஜித் ரசிகர்கள் அடித்துக்கொள்ளும் சண்டைக்கும் நிகரானது.