Connect with us
 

News

தளபதி 65 படம் பற்றி கிடைத்த புதிய தகவல் !

Published

on

கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றிப் படமான பிகில் படத்திற்கு பிறகு தளபதி விஜய் கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “மாஸ்டர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் . சாந்தனு , ஆண்ட்ரியா , சஞ்சீவ், ஸ்ரீமன், க வுரி கிஷான் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் படபிடிப்பு சென்னையில் தொடங்கி டெல்லி மற்றும் கர்நாடகாவில் சிறைச்சாலை போன்ற அரங்கு அமைத்து தற்போது நடைபெற்று வருகின்றது. இந்தப் படத்தில் விஜய் பேராசிரியராக நடிக்கிறார் என தகவல் கசிந்து வருகிறது.

இந்தப் படத்தின் விஜயின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் செகண்ட் லூக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது விஜய்யுடன் , விஜய் சேதுபதி இருக்கும் ரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்ரோஷமான முறையில் மோதுவது போன்ற 3 வது போஸ்டர் வெளியானது . மாஸ்டர் படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தை தொடர்து விஜய்யின் அடுத்த படத்தை இயக்க போவது யார் ? என்ற கேள்வி எழுகிறது இதில் அட்லீ , பேரரசு, மோகன் ராஜா உள்ளிட்ட பலரது பெயர்கள் அடிப்பட்டன.

இபோது இறுதி சுற்று பட இயக்குனர் சுதா கொங்கரா விஜய்யிடம் கதை சொல்லி இருக்கலாம் . இந்த கதை விஜய்க்கு பிடித்து போய்விட்டது என்று தகவல்கள் பரவி வருகிறது. அதனால் மாஸ்டர் படத்தை அடுத்து விஜய் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.