News
தளபதி 65 நாயகி பூஜா ஹெக்டேவின் கொரோனா ரிப்போர்ட் !

மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர் நடிகை பூஜா ஹெக்டே. தற்போது தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது. அங்கு காதல் மற்றும் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன. படப்பிடிப்பை முடித்து விட்டு சென்ற வாரம் சென்னை திரும்பிய படக்குழுவினர்.
சென்னை வந்ததும் நடிகை பூஜா ஹெக்டேவுக்கு சற்று உடல் நிலை சரியில்லாமல் போக பரிசோதனை செய்த அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதியானது.
இதனையடுத்து தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று தான் கொரோனாவில் இருந்து மீண்டு இருப்பதாக அறிவித்துருந்தார்.