Connect with us
 

News

தளபதி 65 படத்தின் பூஜையில் கலந்து கொள்ளாதது ஏன் ? பூஜா ஹெக்டே விளக்கம் !

Published

on

நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது.

இன்று நடைபெற்ற இப்படத்தின் பூஜையில் விஜய் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர் ஆனால் படத்தின் நாயகி பூஜா ஹெக்டே கலந்து கொள்ளவில்லை.

இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், தளபதி 65 பட பூஜையில் இன்று என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. நான் வேறொரு படப்பிடிப்பில் இருந்தேன். அதனால் தளபதி 65 பட பூஜையில் கலந்து கொள்ள முடியாததற்கு வருந்துகிறேன். இருப்பினும் படக்குழுவினருடன் இணைந்து பணியாற்ற மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் என்று அவர் பதிவு செய்துள்ளார்.