Connect with us
 

News

தளபதி 66 படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ் !

Published

on

தளபதி 65 படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது. ராக் ஸ்டார் அனிருத் இப்படத்திற்க்கு இசையமைக்கிறார் தற்போது இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பிக்க படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்க தளபதி 66 படத்தின் தகவல் குறித்து தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தளபதி 66 படம் குறித்து புதிதாக ஒரு அப்டேட் வெளியாகியுள்ளாது. மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கவுள்ளாராம். விஜய் நடித்த மெர்சல் படத்தை தயாரித்த ஶ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிரது.

மிக குறைந்த காலத்தில் இப்படம் உருவாகும் என்றும் இதன் அதிகார்வபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.