Connect with us
 

News

விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை – பூஜா ஹெக்டே !

Published

on

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கும் தளபதி 65 திரைப்படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது.

இந்நிலையில் தளபதி 65 படத்தின் கதாநாயகி யார் என்பது குறித்து தற்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது. தெலுங்கு சினிமாவில் உட்ச கதாநாயகியாக கலக்கி வரும் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக தளபதி 65 படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து பூஜா ஹெக்டேவிடம் விசாரித்த போது விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. இந்த படத்தின் மூலம் இது நிறைவேறினால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி விரைவில் விஜய்யுடன் நடிப்பேன் என்று நம்பிகிறேன்.