Connect with us
 

News

தளபதி 65 படத்தில் இணையும் தேசிய விருது பெற்ற ஸ்டண்ட் கலைஞர்கள் !

Published

on

தளபதி விஜய் நடிக்கும் தளபதி 65 திரைபப்டத்தை டாக்டர் பட இயக்குநர் நெல்சன் இயக்கவிருக்கிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா இல்லை பூஜா ஹெஷ் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வில்லனாக பேட்ட படத்தின் வில்லன் நவாசுதீன் சித்திக் இல்லையெனில் துப்பாக்கி ப வில்லன் வித்யூத் ஜம்மால் ஆகியோர் வில்லனாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் அதிரடி சண்டைகள் காட்சிகள் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஸ்டண்ட் மாஸ்டராக அன்பறிவ் பணிபுரிய உள்ளார் என்று செய்தி வெளியாகியுள்ளாது.

இந்த செய்தியை தயாரிப்பு நிறுவனம் இன்னும் அதிகார்வபூர்வமாக அறிவிக்கவில்லை அப்படி அறிவித்தால் தளபதியுடன் முதல் முறையாக அன்பறிவ் பணிபுரிய உள்ளனர்.

அன்பறிவ் கே.ஜி.எப் படத்திற்காக தேசிய விருதைப் பெற்றுள்ளனற் என்பது குறிப்பிடத்தக்கது.