Connect with us
 

News

தளபதி 65 தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே !

Published

on

தமிழ் சினிமாவிற்கு முகமூடி என்ற படத்தில் அறிமுகமானவர்னடிகை பூஜா ஹெக்டே. அந்த படத்திற்கு பின்னர் தமிழில் வேறு எந்த படத்திலும் இவருக்கு நடிக்கவில்லை. தெலுங்கு திரையுலகில் கால் பதித்த பூஜா ஹெக்டே தற்போது தெலுங்கு திரையுலகில் நம்பர் ஒன் நாயகியாக வலம் வருகிறார்.

தற்போது தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்க்காக இவர் ஒத்துக்கொண்ட சில தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களுக்காக தேதிகளை ஒதுக்கியுள்ளாராம். இதனால் இவர் கேட்ட 3 கோடி சம்பளத்தை ஒரு ரூபாய் கூட குறைக்காமல் கொடுக்க ஒத்துக்கொண்டதாம் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்.

இந்நிலையில் விஜய் படத்தில் ஒப்பந்தமான லக் வரிசையாக பூஜா ஹெக்டேவுக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கின்றது.சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தம் ஆகியுள்ளார்.