News
திட்டமிட்டு இது போன்ற வதந்திகளை பரப்புகிறார்கள் – காஜல் அகர்வால் !

தெலுங்கி திரையுலகில் சூப்பர் ஹீரோ சிரஞ்சீவி தற்போது கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படமான ‘ஆச்சார்யா’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படதில் இவருக்கு ஜோடியாக திரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.இப்படத்தின் மூலம் சுமார் 5 வருடத்திற்க்கு பின்னர் திரிஷா தெலுங்கு திரையுலகில் நடிக்க இருந்தார்.படப்பிடிப்பு தொடங்க சில நாட்களுக்கு பின்னதாக அந்த படத்தில் இருந்து யாரும் எதிர்பாராத விதமாக விலகினார் திரிஷா.
இது பற்றி கூறிய திரிஷா படைப்பு ரீதியான காரணமாக இப்படத்தில் இருந்து சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகி கொள்கிறேன். இந்த படக்குழுவிற்க்கு எனது வாழ்த்துக்கள் ஒர் சிறந்த படதின் மூலம் தெலுங்கு ரசிகர்களை மீண்டும் சந்திப்பேன் என்று பதிவு செய்திருந்தார் த்ரிஷா.
இப்படத்தில் சிரஞ்சீவிக்கு இன்னொரு கதாநாயகி இருக்கிறார். இந்த படத்தில் இன்னோரு கதாநாயகி இருப்பதும் அந்த நடிகைக்கு முக்கியத்துவம் இருப்பதும் திரிஷாவுக்கு பிடிக்காமல்தான் விலகினார் என்று பேசப்பட்டது.
இவர் விலகியதும் அந்த இடத்துக்கு காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனாலும் கால்ஷீட் காரணமாகவும் காஜல் அகர்வால் அதிக சம்பளம் கேட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் இந்த தகவலை காஜல் அகர்வால் திட்டவட்டமாக மறுத்துள்ளார். நான் சிரஞ்சீவி படத்தில் நடிப்பது உறுதி. எனக்கு பிடிக்காத சிலர்தான் இப்படி திட்டமிட்டு வதந்திகளை பரப்பி வருகிறார்கள் என்று கூறினார்.