Connect with us
 

News

தீபாவளிக்கு தள்ளிப் போன தளபதியின் மாஸ்டர் திரைப்படம் சோகத்தில் ரசிகர்கள் !

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மாஸ்டர்’ சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இந்தப் படம் ஏப்ரல் 9 ஆம் தேதி ரிலிஸாக இருந்த நிலையில் தற்போது விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதியன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஆனாலும் ரசிகர்கள் டீசர் மற்றும் டிரைலர் அப்டேட் குறித்து எதும் தகவல் வெளிவருமா என்று காத்திருக்கின்றனர். அந்த நேரத்தில்தான் ‘மாஸ்டர்’ திரைப்படம் முதல் முறையாக 5 மொழிகளில் வெளியாக இருப்பதாக ஐனாக்ஸ் நிறுவனம் தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் ஒரு மாஸ் அப்டேட் ஒன்றை வெளியிட்டது.

படம் கண்டிப்பாக தளபதி பிறந்த நாள் அன்று வெளியாகும் என்று காத்திருக்கும் ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகிருக்கிறது. கொரோனா காரணமாக ஊரடங்கு முடிவடைய மேலும் சில மாதங்கள் எடுக்கலாம் ஆகையினால் தற்போது ‘மாஸ்டர்’ திரைப்படம் மீண்டும் தள்ளி வைக்கப்படுகிறது. இதனால் ‘மாஸ்டர்’ திரைப்படம் வரும் தீபாவளி திருநாள் அன்றுதான் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.