News
துருவ் விக்ரம் நடிக்கும் மூன்றாவது படத்தின் அதிகார்வபூர்வ அறிவிப்பு வெளியானது !

சீயான் விக்ரமின் மகனான துருவ்விக்ரம் வர்மா என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு கதா நாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் எந்த ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகாமால் இருந்து வந்தார்.
பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரமுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் ஆரம்பிக்கயுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் பரியேறும் பெருமாள் என்ற ஒரு மிகப்பெரிய வெற்றி படம் மூலம் தமிழ் சினிமாவிற்க்கு அறிமுகமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். தற்போது தனுஷ் நடிப்பில் கர்ணன் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இந்நிலையில் இவருடைய மூன்றாவது படத்தை இயக்க உள்ளார் இதில் கதாநாயகான துருவ் விக்ரம் நடிக்க உள்ளார். இதன் படி மாரி செல்வராஜ் மற்றும் துருவ் விக்ரம் ஆகிய இருவருக்குமே இது மூன்றாவது படம் என்பதும் இந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.