News
துருவ நட்சத்திரம் படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் ரஜினிகாந்த் !

ரஜினிகாந்த் தான் நடிக்கும் திரைப்படங்களில் சற்று மாற்றம் வேண்டும் என்று நினைத்து புதிய இயக்குநர்களிடம் கதை கேட்டு நடிக்க ஆரம்பித்தார் அப்படி நடித்த முதல் திரைப்படம்தான் கபாலி. அந்த சமயத்தில் ரஜினிகாந்த் பல இயக்குநர்களிடம் கதை கேட்டார் அதில் ஒரு இயக்குநர் கெளதம் மேனன். அந்த சமயத்தில் ரஜினிக்கு அவர் சொன்ன கதைதான் துருவ நட்சத்திரம்.
கிட்டத்தட்ட அந்த திரைப்படம் உறுதியன நிலையில் எதிர்பாராத திருப்பமாக தயாரிப்பாளர் ரஜினிக்கி போன்செய்து அந்த படம் வேண்டாம் என்று கூற ரஜினியும் இல்லை நான் நடிக்கவில்லை என்று கெளதம் மேனனிடம் கூறி விட்டு கபாலி படத்தில் நடித்தார்.
பின்னர் கெளதம் மேனன் துருவ நட்சத்திரம் கதையை விக்ரமிடம் சொல்லி அவரை வைத்து இயக்குனார் என்ன காரணமோ தெரியவில்லை அந்த திரைப்படம் மிக நீண்ட வருடமாக வெளியாகமல் கிடப்பில் கிடக்கிறது.