News
தொலைக்காட்சிக்கு இன்னுமே விலை போகாமல் இருக்கும் ஈஸ்வரன் காரணம் இதுதானாம் !

பொங்கள் பண்டிகை விருந்தாக வெளியானது சிலம்பரசனின் ஈஸ்வரன் திரைப்படம். வெளியாவதில் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு ஒரு வழியாக வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
அதே சமயம் மாஸ்டர் திரைப்படமும் வெளியானதால் ஈஸ்வரன் படத்தால் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஒரு வெற்றி அடைய முடியாமல் போனது.
இந்நிலையில் ஈஸ்வரன் படத்தின் தொலைக்காட்சி உரிமம் இன்னுமே விற்பனையாகாமல் உள்ளதாக கூறப்படுகிறது. முன்னணி நடிகர்களின் படங்கள் எல்லாமே வெளியீட்டுக்கு முன்னரே விற்பனை செய்யப்பட்டு விடும்.
ஈஸ்வரன் திரைப்படம் அப்படி விற்பனை ஆகாமல் இருக்க என்ன காரணம் என்று இப்போது தகவல் வெளியாகியுள்ளாது. இப்படத்தின் தொலைக்காட்சி உரிமைக்கு தயாரிப்பு நிறுவனம் அதிகமான விலை சொல்வதுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
சிம்பு படத்துக்கு தொலைக்காட்சியில் பெரிய அளாவில் டி.ஆர்.பி இல்லை என்ற காரணத்தால் அந்த தொகையை கொடுத்து வாங்க எந்த ஒரு நிறுவனமும் முன் வரவில்லை என்று கூறப்படுகிறது.