News
நமக்கு தேவையானதை நாமதான் எடுத்துக்கணும அசுரன்’ டிரைலர் விமர்சனம்
வெற்றிமாறன் ஓயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் அசுரன் அடுத்த மாதம் வெளியீட்டு தயாராகி உள்ள நிலையில் நேற்று மாலை படத்தின் அதிகார்வபூர்வ டிரைலர் வெளியானது.
இதற்கு முன்பு வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை பட போல ரத்தம் தெறிக்க தெறிக்க டிரைலர் இருக்கிறது படமும் அப்பிடித்தான் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. படத்தின் டிரைலரில் தனுஷ் பெரும் காட்சிகளில் கையில் அரிவாளுடன் வந்து செல்கிறார். அவன் தலையை மட்டும் தனியா வெட்டி எடுத்திட்டு வந்திருந்தா நான் இன்னும் சந்தோஷப்பட்டிருப்பேன் என்று கூறும் மஞ்சுவாரியரை பார்த்தால் இவருக்கும் படத்தில் ஒரு மிரட்டல் இருக்கிறது என்றே தெரிகிறது.
நமக்குத் தேவையானதை நம்ம தான் எடுத்துக்கிடனும் என்ற வசனத்தில் இருந்து நீண்டகாலமாக அடிமைப்பட்டு கிடக்கும் ஒரு பிரிவினர் பொங்கி எழும் கதை என தெரிகிறது. நம்ம கிட்ட இருக்குற காசு, பணம் எல்லாத்தையும் புடுங்கிக்கிடுவாங்க, ஆனால் நம்மகிட்ட இருக்குற படிப்பை மட்டும் யாராலும் புடுங்க முடியாது என்ற வசனத்தில் இருந்து ஒடுக்கப்பட்டவர்கள் மீண்டெழ ஒரே வழி கல்விதான் என்பதை வலியுறுத்தும் படமாக இது இருக்கும் என கருதப்படுகிறது.
ஜி.வி.பிரகாஷின் இசை மற்றும் பின்னணி இசை மிரட்டுகிறது நம்மை. தனுஷின் ஒளிப்பதிவு கடவுளான வேல்ராஜ் அவர்களின் ஒளிப்பதிவு அருமையாக தெரிகிறது படத்தில் இன்னும் பிரமாண்டமாக தெரியும். மொத்தமாக சொல்ல போனால் இந்த அசுரன் அணைத்து தரப்பு ரசிகர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் ஒரு நல்ல வேட்டையாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.