News
நயன்தாராவுக்கு ஜோதிகா பாராட்டு!

‘36 வயதினிலே’ படத்தில் நடித்து அனைத்து தரப்பினரின் பாராட்டுகளை பெற்றார். அடுத்து அவர் நடித்த ‘மகளிர் மட் டும்’ படம் சமீபத்தில் திரைக்கு வந்து ரசிகர்களின் பாராட்டு களுடன், வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
‘36 வயதினிலே,’ ‘மகளிர் மட்டும்’ ஆகிய 2 படங்களுமே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்டவை. தொடர்ந்து இதுபோன்ற கதையம்சம் உள்ள படங் களில் நடிப்பது என்று ஜோதிகா முடிவெடுத்து இருக்கிறார். இதற்காக அவர் சில டைரக்டர்களிடம் கதை கேட்டு வரு கிறார். அவர் நடிக்கும் புதிய படத்துக்கான அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.
தமிழ் பட உலகில் இப்போது ‘மார்க்கெட்’டில் இருக்கும் கதாநாயகிகளில் நயன்தாராவை ஜோதிகாவுக்கு பிடித்து இருக்கிறது. “நயன்தாரா நல்ல கதையம்சம் உள்ள படங்களையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்” என்று ஜோதிகா பாராட்டியிருக்கிறார்!