News
நல்ல கதையையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் – ஷ்ரத்தா ஸ்ரீநாத்
நல்ல கதையையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து தனது நடிப்பு திறமையை படத்துக்கு படம் நிரூபிக்கும் எந்த ஒரு நடிகரும் வேகமாக வளர்வதை யாராலும் தடுக்கமுடியாது.
நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கும் ‘ரிச்சி’ படம் வரும் டிசம்பர் 8 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இப்படத்தில் நிவினுடன் நட்ராஜும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இப்படத்தில் நிவினுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். சமீபகாலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தனது வசீகர புன்னகையாலும், திறமையான நடிப்பாலும் தடம் பதித்துக்கொண்டிருக்கும் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
‘ரிச்சி’ குறித்து ஷ்ரத்தா ஸ்ரீநாத் பேசுகையில், ” தமிழிற்கும் , தமிழ் நாட்டிற்கும் இதற்கு முன்பு எந்த தொடர்பும் இல்லாத, எந்த வித சினிமா பின்புலமும் இல்லாத எனக்கு இதுவரை அமைந்துள்ள சினிமா பயணம் திருப்திகரமாக அமைந்துள்ளது. இயக்குனர் கவுதமிற்காகதான் ‘ரிச்சி’ படத்தை முதலில் ஒப்புக்கொண்டேன்.
அவரது தொழில் அணுகுமுறை எனக்கு பிடித்திருந்தது. நான் சந்தித்துள்ள நடிகர்களில், மிகவும் அர்ப்பணிப்போடும், எந்த வித பந்தாவும் இல்லாமல் மிக எளிமையாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் நிவின் பாலி. சக நடிகராகவும், நண்பராகவும் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் மறுபடியும் பணிபுரிய ஆவலோடுள்ளேன். இப்படத்தின் எனது கதாபாத்திரத்தின் பெயர் ‘மேகா’. ஒரு பத்திரிக்கையாளர் கதாபாத்திரம் இது. தனது கருத்துக்களில் உறுதியாகவும், தான் நம்பும் விஷயங்களுக்கு போராடும் குணமுள்ள கதாபாத்திரம் இது. ‘ரிச்சி’ படத்தின் கதை சொல்லும் முறை மிகவும் வித்யாசமாக இருக்கும். இது ஒரு புது வித சினிமாவாக நிச்சயம் இருக்கும். டிசம்பர் 8ஆம் தேதி ரிலீஸாகவுள்ள இப்படத்தை மிகவும் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன் ”
‘ரிச்சி’ படத்தை கவுதம் ராமசந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தை ‘Cast N Crew’ நிறுவனம் சார்பில் ஆனந்த் குமார் மற்றும் வினோத் ஷோர்னுர் தயாரித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசையில், பாண்டி குமார் ஒளிப்பதிவில் ‘ரிச்சி’ உருவாகியுள்ளது. நிவின் பாலியின் முதல் நேரடி தமிழ் படமான ‘ரிச்சி’ படத்தை ‘Trident Arts’ ரவீந்திரன் தமிழகமெங்கும் release செய்யவுள்ளார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் பரத் மற்றும் லக்ஷ்மிப்ரியா சந்திரமௌலி ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.