Connect with us
 

News

பர்ட்ஸ் லுக் எப்பிடி இருக்கு இன்னொரு சர்ப்ரைஸ் இருக்கு கே.ஜே.ஆர் கொடுத்த அலர்ட் !

Published

on

கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் படம் டாக்டர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.டாக்டர் படத்தை கே.ஜே. ஆர் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரோடக்சன்ஸ் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் பரிசாக இன்று வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.அதே போல் டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அதிகாரபூர்வமாக சிவகார்த்திகேயன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இன்று காலை 11.3 மணி அளவில் வெளியிட்டார்.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சிவகார்த்திகேயன் செம்ம மாஸாக கையில் ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு சோபாவில் அமர்ந்துள்ளார். இதை சமூக வலைத்தளங்களில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். டாக்டர் படத்தில் பிரியங்கா மோகன் , வினய், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்திற்கு இசையமைகிறார் அனிருத்.

குழந்தைகளுக்கு பிடித்த நாயகன் என்றால் அது சிவகார்த்திகேயன் தான் .சின்னத்திரையில் தொடங்கி வெள்ளித்திரையில் முத்திரை பதித்திருக்கிறார்.சிவகார்த்திகேயனின் 35 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பல ஹாஸ் டேக்களை உருவாக்கி ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் . ரசிகர்கள் மட்டுமில்லாமல் பிரபலங்களும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹாப்பி பர்த்டே மை கியூட்டி என வாழ்த்தியுள்ளார். சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் கனா படத்தை இயக்கிய இயக்குனர் மற்றும் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகரான நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ரஜினி ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

By : Saranya