Connect with us
 

News

பறந்து பறந்து அடிக்குறவங்கதான் ஹீரோவா ?

Published

on

இசையமைப்பாளராக இருந்து வெற்றி பட நடிகராக வளர்ந்து இருப்பவர்தான் விஜய் ஆண்டனி அவர்கள் இவர் சுமார் 20 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.

இவர் நடிகராக வந்த பின்னர் மக்களுக்கு பிடித்தமான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார் அப்படி இவர் நடித்து வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்ருக்கும் படம்தான் காளி .

இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி அவர்கள் நான் நடிகன் கிடையாது. உண்மையில் எனக்கு நடிக்க தெரியாது. நான் ஹீரோ என்று சொல்லிக் கொள்ளலாம். ஹீரோ என்பது ஆக்‌ஷன், பில்டல்புகள், ஸ்லோமோஷனில் நடந்து… அப்படிப்பட்ட ஹீரோ நான் கிடையாது.

பறந்து பறந்து நடிக்கணும் ஒரு அடியில கார் இரண்டா தெறிக்கனும் அப்பிடின்னு எல்லாம் நினைக்க மாட்டேன் ஆளுமை,குணாதியசம் , நல்லவன் என்பதுதான் ஹீரோ என்பதற்கு என்னுடைய அளவுகோல்கள் என தெரிவித்துள்ளார். மக்களுக்கு பிடித்தமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் இவரின் வெற்றிப்பட பயணம் இப்படியே தொடர வேண்டும் அதைத்தான் மக்களும் விரும்புகிறார்கள்.

Continue Reading