Connect with us
 

News

கேப்ரில்லாவை தொடர்ந்து பிக்பாஸ் ஆஜித்துக்கும் கொரோனா தொற்று !

Published

on

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கல்ந்து கொண்டவர் பாடகர் ஆஜித். அதன் பின்னர் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் ஆஜித்துக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் கேப்ரில்லா சேர்ந்து நடனமாடினார்.

இந்நிலையில் கேப்ரில்லாவுக்கு சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அவருடன் நடனமாடிய ஆஜித்துக்கு இன்று கொரோனா தொற்று உறுதியானது.

இது குறித்து தனது சமூக வளைத்தளத்தில் தெரிவித்துள்ள ஆஜித் எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னுடைய உடல்நிலை சீராகாவே உள்ளது.

உங்களுடைய பிரார்த்தனைக்கு மிக்க நன்றி அனைவரும் உரிய பாதுகாப்பும் வழிமுறைகளை பின்பற்றி வீட்டை விட்டு வெளியே சென்று வரவும். பாதுகாப்பாக இருங்கள் விரைவில் இயல்புநிலை திரும்பும் என நம்புவோம் என்று கூறினார்.