Connect with us
 

News

ஸ்டார் மூவிஸ் தயாரிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் பிரஷாந்த் நடிக்கும் அந்தகன் !

Published

on

பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் இயக்குநர் பெடரிக் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் அவர் தந்தை தயாரிப்பில் உருவாக இருந்த திரைப்படம் அந்தகன்.

பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படமான அந்தாதூன் என்ற படத்தின் அதிகார்பூர்வ தமிழ் ரீமேக் இப்படம் பாலிவுட்டில் நடிகை தபு ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருப்பார் அதே வேடத்தில் தமிழில் நடிகை சிம்ரன் நடிக்கவிருக்கிறார். அது மட்டுமில்லாமல் நடிகர் கார்த்திக் அவர்களும் இப்படத்தில் இணைந்தார் என்பதும் நாம் பலர் அறிந்த ஒன்றுதான்.

இந்நிலையில் ஒரு சில தினங்களுக்கு முன்னர் யாரோ வேண்டுமென்றே சிலர் வதந்தியை பரப்பு வந்தனர் அது என்னவேன்றால் படத்தில் உள்ள இயக்குனர் தொழிநுட்ப கலைஞர்கள் படத்திலிருந்து விலகி விட்டதாகவும் இப்படம் கைவிடப்பட்டதாகவும் தகவள் வெளியானது.

இன்று காலை வதந்திகளை பொய்யாக்கும் வகையில் இப்படத்தின் தயாரிப்பாளரான தியாகராஜன் இந்த படத்தின் பூஜையை தொடங்கினார். சற்று முன்னர்தான் இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இந்த பூஜையில் சிம்ரன், பிரசாந்த் மற்றும் இந்த படத்தில் உள்ள அனைவரும் கலந்து கொண்டனர். இன்று முதல் இனிதே படப்பிடிப்பு ஆரம்பம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.