News
பூஜையுடன் தொடங்கியது விக்னேஷ் சிவனின் காத்துவாக்குல ரெண்டு காதல் !

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த ‘நானும் ரவுடிதான் மற்றும் இமைக்கா நொடிகள் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. இந்நிலையில் தற்போது மூன்றாவது முறையாக் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடிக்க உள்ளனர் என்ற அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்னர் வெளியானது.
நயன்தாராவின் காதன் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று சிறிய பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தின் பூஜையில் விஜய்சேதுபது, விக்னேஷ் சிவன் கலந்து கொண்டனர். நயன்தாரா, சமந்தா மற்றும் அனிருத் இந்த பூஜையில் கலந்து கொள்ளவில்லை.
இன்று முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதாகவும் தொடர்ந்து ஒரு மாதம் சென்னையில் படப்பிடிப்பு நடைபெறும் மிக விரைவில் இப்படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொள்வார் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படத்தில் மிக மிக முக்கியமான ஒரு கதாப்பாத்திரத்தில் நடிகை சமந்தா நடிக்கா உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.