News
பேட்ட படத்தின் வசூலை அடிச்சி தூக்கிய விஸ்வாசம் தயாரிப்பாளர் மகிழ்ச்சி
பொங்கல் விருந்தாக தல அஜித் நடித்த விஸ்வாசம் படமும் தலைவர் ரஜினி நடித்த பேட்ட படமும் கடந்த வியாழன் அன்று வெளியானது. பலத்த எதிர் பார்ப்புடன் வெளியான இரண்டு படங்களும் ரசிகர்களின் காத்திருப்பை பூர்த்தி செய்தது.
கிட்ட தட்ட 21 ஆண்டுகள் கழித்து ரஜினி – அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாகி உள்ளது இதற்கு முன்னர் 1997 ஆம் ஆண்டு ரஜினி நடித்த அருணாச்சலம் படமும் அஜித் நடித்த ராசி படமும் ஒரே நாளில் வெளியாகி அந்த இரு படங்களும் நல்ல வெற்றியை பெற்றது.
இந்நிலையில் தற்போது விஸ்வாசம் படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் இரு படங்களின் மோதல் குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார்.
நாங்கள் தீபாவளி திருநாளில்தான் படத்தை வெளியிட இருந்தோம் இடையில் நடந்த சினிமா வேலை நிறுத்தத்தால் அது தள்ளி போனது.
அதனால்தான் பொங்கல் வெளியீடு என்று கூறினோம். அதே நாளில் பேட்ட படமும் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்தது எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அப்பிடி இருந்தும் அவர்களிடம் நாங்க பேச்சு வார்த்தை நடத்தினோம் அதற்கு அவர்கள் பொங்கல் விடுமுறை என்பதால் வெளியீட்டு தேதியை மாற்ற முடியாது என்று கூறுவிட்டனர்.
நாங்கள் ரஜினியை வைத்து கிட்ட தட்ட 6 படங்களை தயாரித்து உள்ளோம் அதனால் எங்களுக்கு மிகவும் ஒரு தர்மசங்கடமாகத்தான் இருந்தது. அனால் உண்மை என்னவென்றால் ரஜினியுடன் மோதி அஜித் அவரை வென்று விட்டார். படத்திற்கு நல்ல வரவேற்பும் நல்ல வசூலையும் கொடுத்து விட்டார். அது மட்டும் அல்ல அஜித் குமாரும் சூப்பர் ஸ்டார்தான் என்று கூறினார்.
விஸ்வாசம் படத்தின் தமிழ் நாட்டு வெளியீட்டு உரிமத்தை கே.ஜே .ஆர் நிறுவனம் பெற்றது என்பது குறிப்பிட தக்கது.