Connect with us
 

News

போடு வெடிய வாத்தி கம்மிங் விஜய் ரசிகர்களுக்கு சந்தோஷமான செய்தி !

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் முடிவடைந்து விட்ட நிலையில் வெளியீட்டு தேதிக்காக காத்திருக்கிறது.

இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆண்ரியா , ஷாந்தனு மற்றும் பலர் நடித்துள்ளார்.

ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்க்கு இசையமைத்துள்ளார் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் ஆடியோ வெளியிட்டுக்கு பின்னர் படத்தின் டிரைலர் மற்றும் டீசருக்காக வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்கள் கொரோனா வைரஸ் வந்து அணைத்தையும் ஆப் செய்து விட்டது.

இதனால் படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளி போய்விட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் தயவு செய்து டிரைலர் இல்லையென்றால் டீசர் ஆவது வெளியிடுங்கள் என்று ஏக்கத்துடன் கேட்டு வருகிறார்கள். அப்படி கேட்டு வந்த ரசிகர்களுக்கு இதோ அந்த சந்தோஷமான செய்தி வந்துவிட்டது.

திரைப்படத்தை தீபாவளி திருநாளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் இடருந்து தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வருகின்ற ஜூன் 22-ம் தேதி விஜய் அவர்களில் பிறந்த நாள் இந்த நாளில் இப்படத்தின் டிரைலரை வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளாது.

இதுவும் அதிகார்வபூர்வ தகவல் இல்லையென்றாலும் உறுதி செய்யப்பட்ட தகவல் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மிக விரைவில் படத்தரப்பிலிருந்து அதிகார்வபூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.