Connect with us
 

News

சமையல் நிகழ்ச்சி தொகுப்பாளராக மக்கள் செல்வன் !

Published

on

தமிழ் சினிமாவிற்கு இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி தற்போது முன்னணி நாயகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

தன் இமேஜை பற்றி கொஞ்சமும் கவலையில்லாமல் வில்லன் கதாப்பாதிரங்களிலும் நடித்து வருகிறார் இவர் இறுதியாக மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து மாஸ்காட்டியிருந்தார்.

இந்நிலையில் இவர் அடுத்ததாக தனியார் தொலைக்காட்ச்சிக்காக ரியாலிட்டி சமையல் நிகழ்ச்சியை நடத்தவுள்ளார். அந்த நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் விஜய்சேதுபதி ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

டி.வி நிகழ்ச்சிக்காக விஜய் சேதுபதி ஹெலிகாபட்டரில் கெத்து காட்டியுள்ளது பலரையும் வியக்கவைத்துள்ளது. ரசிகர்களிடம் பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக இந்நிகழ்ச்சி அமையுமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.