News
மாஸ்டர் படத்தின் இறுதி கட்டத்தில் ஆண்ட்ரியா

கடந்த ஆண்டு தனது காதல் தோல்வி குறித்து பரபரப்பாக கருத்துக்களை வெளியிட்டு அனைவர் மத்தியிலும் பரபரப்பானார். தற்போது அந்த தோல்விகளில் இருந்து மீண்டு வந்து தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் முக்கியமான ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால் என்ன கதாப்பாத்திரம் என்று படம் வெளியாகும் போது திரையில் பாருங்கள் என்று ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.
மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அருகில் அமர்ந்து தான் நடிக்க வேண்டிய காட்சி குறித்தும் , வசனங்கள் குறித்தும் மிக கவனமாக கேட்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.
இது குறித்து இவர் கூறும் போது இந்த ஆண்டின் மிகப்பெரிய ஒரு திரைப்படத்தில் நான் நடிப்பது அற்புதமான ஒரு அனுபவம் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் மாஸ்டர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக நான் தயாராகி வருகிறேன் என்று கூறினார்.