News
மாஸ்டர் படத்தின் டிரைலர் வெளியீடு எப்போது இயக்குநர் விளக்கம் !

தளபதி விஜய் – மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இவர்களுடன் மாளவிகா மோகனன் மற்றும் ஆண்ரியா நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘மாஸ்டர்’ இந்த படம் இன்று உலகமெங்கும் வெளியாக இருந்தது. தற்போது உள்ள ஊரடங்கு காரணமாக படம் தள்ளி போய்விட்டது. படம் எப்போதும் வெளியாகும் என விஜய் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
அடிக்கடி படம் எப்போது வெளியாகும் என சமூக வலைத்தளங்கலில் கேள்வி கேட்டு வருகிறார்கள். இதற்கிடையில் ‘மாஸ்டர்’பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் டுவிட்டரில் லோகேஷ் கனகராஜ் பெயரில் மாஸ்டர் படத்தின் டீசர் இப்போது வெளியாகும் டிரைலர் ஏப்ரல் 14 தேதி வெளியாகும் படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இதை அறிந்த படக்குழு மிகவும் அதிர்ச்சி அடைந்தது காரணம் லோகேஷ் கனகராஜ் இது போல் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை என்பதுதான் இது பற்றி அவர் விளக்கம் அளிக்கும் போது நான் டுவிட்டரில் மட்டுமே இருக்கிறேன். பேஸ்புக் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நான் இல்லை. அவையெல்லம் போலியானவை எச்சரிக்கையாக இருங்கள் என ரசிகர்களை கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.